நீ எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதமே

எனை கொள்வாயா
இல்லை கொல்வாயா
எதுவென்றாலும்
பரவாயில்லை
எனை வெல்வாயா
இல்லை தோற்பாயா
எதுவானலும் எனக்கு
பரவாயில்லை
நீரில்
மிதந்தாலும்
கரைந்தாலும்
மூழ்கினாலும்
எனக்கு சம்மதமே
மரத்தின்
இலை உதிர்ந்தாலும்
பூ வாடினாலும்
கிளை முறிந்தாலும்
வேரோடு சாய்ந்தாலும்
நீ என் மரமே
நானும் சாய்வேன் உன்னோடு
இல்லையேல்
மண்ணோடு.....
நீ வளரும் போது
நான் வளர்பிறை
நீ கரையும் போது
நான் தேய்பிறை
நீ சிரிக்கும் போது
நான் பௌர்ணமி
நீ அழுகும் போது
நான் இறக்கிறேன்
என்னில்
உன் சோகங்கள்
கரையட்டும்
எப்போதும் வளரு
நீ மேலே மேலே....
~ பிரபாவதி வீரமுத்து