நானே நிலா

வேறு நிலாக்களை பாடுகிறாயே
என்னைத் தவிர வேறு நிலா இல்லை உலகில்
நானே நிலா என்றது வெண்ணிலா !

அருகே சிரிக்கிறாள் பார் என் நிலா
என்றேன்

வான் நிலா பார்த்தாள் முகம் சுளித்தாள்

சரி அவளுக்கு கஜல் பாடு
எனக்கு கவிதை போடு
என்றாள்

சரி என்றேன்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

வள்ளுவர் சொன்னதைச் சொல்லி என்னை சீண்டுகிறாய்
நீ வேறு நிலாவையே பாடு .
உன் பக்கங்களில் இனி நான் வரப்போவதில்லை என்றாள் கோபமாக ..

இப்படித்தான் நம்ம நிலா கொஞ்சம் கோவிச்சுக்கும். நிலவூடல் !

நாளை வரும். பிறைக் கோடானாலும் வந்து சிரிக்கும் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-16, 5:21 pm)
Tanglish : naaney nila
பார்வை : 122

மேலே