என் உயிர் காதலி மனைவி

என் அவள் அவளே என் உயிரின் நிழலே,
அவள் அருகினில் இருந்தால் உலகமும் மறக்கும்,
அவள் ஒவ்வொரு செய்கையும் சிறு குழந்தை போலே,
அவள் இடையின் அழகை அந்த நிலவும் ரசிக்கும்,
அந்த இறைவன் படைப்பில் ரகசியம் ஏனோ,
அவளை கண்டால் போதும் மனம் ஒருநிலை ஆகும்.
பேச பேச கேட்க்க தோன்றும் அவளின் பேச்சு,
அவள் அருகில் சென்றால் நறுமணம் வீசும் பூங்காற்றும் பேசும் ,
இந்த உலகம் என் வசம் இருந்தால் அனைத்தும் உன் வசம் சமர்பிப்பேன்,
பிரம்மனும் பிரமிக்கும் அழகின் அதிசயம் நீ தான் பெண்ணே!
மலர் வாடும் நேரமும் கண்டேன் ஆனால் உன் முகம் வாடி நான் கண்டதில்லை இதுவரை!
உன் வருகை அறிந்தால் அழகும் முகம் கழுவும்,
உன் பாதம் பட்டால் மலரும் மயங்கும்,
நீ தனியே நடந்தால் மேகமும் உன்னை சூழும்,
என்றும் உன் நிழல் போல உன்னை தொடர்வேன்,
சுவாசிக்கும் காற்றாய் எங்கும் இருப்பேன்,
பெருமை தேடி தரும் பொறுமை உன்னிடம்,
நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

எழுதியவர் : சிட்லபாக்கம் வீ.ஆர்.சதிஷ் (6-Feb-16, 3:30 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 1173

மேலே