பொட்டு வைத்த முகமோ - ஹரிகாம்போதி

சுமதி என் சுந்தரி (1971) என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா விற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பி.சுசீலா பாடிய ’பொட்டு வைத்த முகமோ’ ஒரு அருமையான பாடல் ஆகும்.

ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த இப்பாடல் மலைப்பிரதேசத்தில் படமாக்கப் பட்டிருக்கிறது. யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.

பொட்டு வைத்த முகமோ…
கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்

இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்

செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்…. (பொட்டு வைத்த)

ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்

மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தாள்…. லலாலலாலலாலலா…

ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று

கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா…(பொட்டு வைத்த)

மலைத் தோட்டப்பூவில் என்ற இடத்தில் ’பூயில்’ என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடுகிறார். சிவாஜி கணேசனுக்காக இவர் பாடிய முதல் பாடலாம். வேற்று மொழிக்காரராக ஆரம்ப நிலையில் பாடியதனால் ஏற்பட்ட சிறு தவறாக இருக்கலாம்.

ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த பிரபல பாடல்கள்:

தினமணி வம்ச : ஆதி தாளம், தியாகராஜர்.

ராம நன்னு ப்ரோவரா : ஆதி தாளம், தியாகராஜர்.

நீயே கதி : ஆதி தாளம், கோடீஸ்வர ஐயர்.

பார்க்க பார்க்க : மிஸ்ர சாபு தாளம், கோபால கிருஷ்ண பாரதி.

சம்போ சங்கர : ஆதி தாளம்: முத்துத் தாண்டவர்.

பாமாலைக்கிணை : ஆதி தாளம்: பாபநாசம்சிவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-16, 10:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 795

சிறந்த கட்டுரைகள்

மேலே