உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது- சக்ரவாகம்

கர்ணன் (1964) திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கண்ணன் (என்.டி.ராமாராவ்) பாடுவதாக சக்ரவாகம் ராகத்தில் அமைந்த ’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா’ என்ற அருமையான பாடலை விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகிறார். பாடலும் அருமை, பாடுவதும் அருமை. யு ட்யூபில் கேட்டு மகிழலாம்.

இதே ராகத்தில் பாலசுந்தரக் கவி என்பவர் இயற்றிய ‘உருகாதா! மனம் உருகாதா உரக சயனன் மருகா’ என்ற பாடலை மதுரை சோமசுந்தரம் அவர்கள் பாடும் ஒவ்வொரு கச்சேரியிலும் கேட்டிருக்கிறேன். இப்பாடலை நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் வி.காளிதாஸ் என்பவர் வாசித்தும் கேட்டேன். அற்புதம்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா (உள்ளத்தில்)

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை (தாய்க்கு)
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா (நானும்)
(உள்ளத்தில்)

மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா (உள்ளத்தில்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-16, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 270

மேலே