பெண்களின் ஆடை பண்புடையதாய்

பெண்களின் ஆடை பாங்குடையதாய் இருத்தல் அவசியம் ...
----------------------------------------------------------------------------------------------

பெண் என்பதால் நான் இதை எழுத முற்பட்டுள்ளேன்.... ஒரு தாயாக இது கடமையும் கூட....

பெண் என்பவள் புனிதத்தின் பிம்பம் என அறிவோம்.... உண்மை!!! பால் போன்று வெண்மை என்று கூறும் பொழுது அதில் தூய்மை ஒளிந்திருக்கிறது.....அதுபோல் ஒரு பெண் தூய்மையானவள்தான்....

எல்லாமே நம் கையில் தான் உள்ளது பெண்ணே!!!!

நாம் உடுத்தும் ஆடை என்பது நம் மனதை வெளிப்படுத்தும் என்றால் பொய்யல்ல... நம் உணர்சிகளின் வெளிப்பாடுதான் நம் ஆடை.... ஆடை அலங்காரங்கள் சற்று அவரவர் சமய வழிப்பாட்டில் மாறி இருக்கலாம். பெரும்பாலும் இன்றைய கால கட்டத்தில் பெரிய வித்யாசங்கள் இல்லை என்பது உண்மை...

நாம் உடுத்தும் ஆடை ஆனது என்னை பொறுத்த வரையில் பாங்குடனும், வரம்பு மீறாமலும், ஒழுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்பது....
அழகாக உடுத்துவது அவசியம் அதனை பாங்குடன் அணியவேண்டும் என்பது கட்டாயம்..... ஆள் பாதி, ஆடை பாதி என்பதன் அர்த்தம் சிலர் தவறாய் புரிந்து கொண்டு விட்டனரோ என்று தோன்றுகிறது.... இதற்கு அர்த்தம் நாம் அழகாய் இல்லை என்று நினைப்பவர்கள் ஆடை அலங்காரம் செய்து கொண்டால் அவர்களது அழகு மேன்படும், மிடுக்காகவும் இருப்பார் என்றுதான் இதற்குப் பொருள்.....

எந்த ஆடியோ அது பரவாயில்லை ... புடவை, சுடிதார், பான்ட், லேகிங்க்ஸ் , டி.ஷர்ட் . டாப்ஸ் ... அதை வரம்பு மீறாமல் உடுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய பணிவான ஆசை, வேண்டுகோள் பெண்ணே..... நீ நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்... சற்று சிந்தித்து செயல் படுவோம் சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்தை ஒன்று கூடி உயர்த்துவோம்....

பெண்ணின் நலன் கருதும் ...

மைதிலி ramjee

எழுதியவர் : ஸ்ரீமதி.மைதிலி ramjee (6-Feb-16, 11:30 am)
பார்வை : 606

சிறந்த கட்டுரைகள்

மேலே