உங்கள் அலுவலகம் உன் திறனை மதிக்கிறதா

அலுவலகம் உன் திறனை மதிக்கிறதா???
------------------------------------------------------------------

20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு வரை அரசாங்க உத்தியோகம்தான் சிறந்தது என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தது... அது சற்று மாறி , என்னவோ அரசு அலுவலங்களில் நம் திறனை வெளிக் கொணர முடியாது... ஒரே மாதிரியான வேலை மட்டுமே செய்யவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது...

விளைவு??? தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கால் ஊன்ற வழிவகுத்தோம்!! என்ன ஆயிற்று? மனதை தொட்டு சொல்லுங்கள்!! தனியார் நிறுவனங்களில் இன்று நம் திறனை, படிப்பை, நேர்மையை எங்காவது மதிக்கிறார்களா???? இல்லை என்றுதான் நான் ஆணித்தரமாக சொல்லுவேன்!!

வஞ்சகம், பொறாமை, மற்றவரை வாழவிடக்கூடாது என்பதில் அக்கறை , ஜால்ரா தட்டுவது, முந்தி அடித்துக்கொண்டு மற்றவரை கீழ் தள்ளி விட்டு ஒரு இடத்தைப பிடிப்பது என்று தான் இன்று காண முடிகிறது! உண்மையா இல்லையா?? சிலர் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்....

என் மனம் இன்று வேதனைப் படுகிறது! ஏன் அன்று அரசாங்க வேலையில் அமரவில்லை என்று!! வேதனை!

இன்று, தனியார் அலுவலகத்தில் பெரும்பாலானவை தன்னிச்சையாக செயல் படுகின்றன.... பெரிய கம்பனிகளில் பணிபுரிபவர்களுக்கு கொஞ்சம் பிரச்சனைகள் கம்மி... அவர்களுக்கு ஹெச் . ஆர். என்கிற அவர்களை பாதுகாக்கும் தனி துறை செயல்படுகிறது... இவர்களது தேவைகள், குறைகள், கோரிக்கைகள், முன்னேற்றம் எல்லாவற்றையும் அது பார்த்துக்கொள்ளும்.... ஆனால், சிறிய கம்பனிகளில் பணிபுரிபவர் நிலை மிகவும் மோசம்....

ஒருவர் நன்கு படித்திருந்தாலும் சரி, அவருக்கு போதிய அனுபவம் இருந்தாலும் சரி, எதையும் மேற்கொள்ளும் திறன் படைத்தவராயினும் சரி , அவருக்கு தகுந்த பதவியோ அல்லது சம்பளமோ கிடைப்பது என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு கேள்விக் குறியே!!! இது முற்றிலும் உண்மை...

ஒன்று நம் மனதில் உதிப்பது, எதற்காக நாம் உயிரை விட்டு நமக்கு ஒப்படைத்த வேலை தவிர மற்ற வேலைகளை இழுத்து போட்டு செய்யவேண்டும்... நம்மை என்ன செய்ய சொல்கிறார்களோ அதை மட்டும் செய்வோம்.... எது நடந்தாலும் கண்ணையும், காதையும், வாயையும் மூடி இருப்போம்.... இது தான் நாம் பிழைக்க வழி.... முதலாளிகளுக்கு இன்று உண்மையான உழைப்பு தேவை இல்லை, உண்மை அற்ற பெருத்த புத்திசாலிகள் தான் தேவை என்று ஆகிவிட்டது.... மேல்போக்காய் பார்பதற்கு உண்மை உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே போதும்... அவன் முன்னுக்கு வந்து விடுவான்.... வேஷம் போட கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்...

பொறாமை என்பது இருக்கிறதே அதை என்னவென்று சொல்ல!!! இது இந்தியாவில் மட்டும் தானா ? அல்லது மேலை நாடுகளிலும் உண்டா என்பதை இன்னும் ஆராயவில்லை.... ஒருவனை எப்படியும் புரட்டிப்போட்டுவிடும்.... பொறாமைக்கு பலி ஆனவன் காலி.....

உங்களுக்கு கொடுக்கிற சம்பளத்திற்கு முடிந்தவரை உழையுங்கள்.... மற்றபடி, எல்லாம் உண்மை , நேர்மை, லட்சியம் என்று எதையும் மனதில் ஏந்திக் கொண்டு வாழ்கையை வீணாக்காதீர்கள்.... அது இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்று.....

மீண்டும் மற்றொரு எண்ணத்துடன்

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (6-Feb-16, 10:37 am)
பார்வை : 303

மேலே