காலவிரயம்
காலவிரயம்
===========
எப்படி உன்னை சமாதானம் செய்வது
நீண்ட சண்டைக்குப்பின்னால்
சமாதானத்திற்கு அருகும்
நம் பிடிவாத இதழ்கள்
எப்போது முத்தமிட்டுக்கொள்ளப்போகின்றன,,,!!
உன்பிறந்த நாளின் போதும்
நீ பூப்படைந்த நாளின் போதும்
என்னை
தவிக்கச்செய்துப் போகும்
உன் பிரிவு நாட்களின் போதும்
ஒரு சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்து
அவையிடந்தான்
நீயிருப்பதாய்ச்சொல்லி பேசிக்கொண்டிருப்பேன்,,,,,!!!
என் வருடாந்திர நாட்குறிப்பின்
காலியாகிக் கிடக்கும்
உனக்கான அந்தந்த நாளின் பக்கங்களில்
அப்பொழுதுதான் கட்டவிழ்த்த
யார்ட்லியின் புதிய உறையை வைக்கிறேன்
உனைக் குறித்த
மைய்யிழையின் மேலே
காற்றுமோதும் போதெல்லாம்
"நுகர்தல்" எத்தனை இதம் அறிவாயா ம்ம்,,,,!!!
வியர்வை வழியும் உன் கக்கத்தின் கீழ்தான்
உன் தோழியிடம்
உனக்காக கொடுத்தனுப்பிய
கடிதப்புத்தகம் நனைகிறது
என் காதலை யேற்கவேண்டாம்
இப்படியொருவன்
உன்னை நேசிக்கிறேன் என்னும்
வெளியிடப்படாத அடையாளம் அது தெரியுமா
வேகாத பச்சைப் பிணத்தின் யேக்கங்களை
உன் வியர்வையில்,
காயங்களாக,
மீண்டும் என்னால் கிறுக்கமுடியாதுதானே
ஆதலால் கண்டுக்கொள்
"உன் விழிகளை"
உடைக்கின்ற சூத்திரங்களாக்கி,
ஒருவரும் அருகாவண்ணம்
காவல் இருத்திவிட்டு
என் இதயகாலதரை சுவர்க்கட்டி அடைத்துவிட்டாய் ,,,,,!!
உன்னுடைய,
ஒரு சேலை(வா)வன சந்திரப்பூக்கள்
எண்ணிக்கையின்
நிகழ் ஆயுளிலிருந்து மீளாத எனக்குள்,
சட்டை உரியும் முனங்கல்களை,
ஊசிநூற்நுழைத்து,
அடுத்தடுத்த சேலைவிரித்துக்காத்திருக்கிறாய் ,
"காலவிரயத்தை
யாருக்கு பிடிக்குமோ இல்லையோ தெரியவில்லை
உன் பின்னால் தொடர்ந்த நாட்களில்
உன்னாலேற்பட்ட
காலவிரயம்
எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது ம்ம்" ,,,,!!!
"பூக்காரன் கவிதைகள்"