தூது
மனதினை கவர்ந்தவளே
எப்போதாவது பொழிகின்ற
மழைக்காக
எப்போதுமே காத்திருக்கின்ற
பூமியைபோலே
உன் விழியோர பார்வைகளுக்காக
விழி திறந்து காத்திருக்கிறேன்
மலரிதழ் சிந்திய தேன்
உன்னிதழ் சிந்திடும் புன்னகை
என் முகம் தழுவி செல்கின்ற
மார்கழி பனிக்காற்று
உன் புன்னகையை
எனக்கு நினைவூட்டி செல்கிறது
சந்தித்த முதல் நொடி முதல்
நிகழ்கின்ற நொடி வரை
உன்னை பற்றி சிந்தித்தது
எத்தனை முறையோ
எண்ண முடியவில்லை
உன்னை எண்ணாமலும்
இருக்க முடியவில்லை
உன்னிடம் பேசிவிட
மனம் துடித்துக்கொண்டே
இருக்கிறது ஏனோ
உன்னை காணும்போதெல்லாம்
மொழியோடு போரிட்டு
பேச வழியின்றி
தோற்று போகின்றன
என் உதடுகள்
இதழ்கள் திறவாத போது
இமைகளை திறந்தே வைத்து
என் பார்வைகளை
தூதாய் அனுப்பிட துணிந்து விட்ட நிலையில்
உன் முகத்துக்கு
எதிரே பயனற்று போகின்றன என்
பார்வையின் பானங்கள்
கரை சேர கதியற்று போன
கட்டுமரம் கடல்
அலையை கரையினுக்கு
தூதாய் அனுப்புதல் போலே
காதல் சொல்ல
கவிதைகளை
தூதாய் அனுப்புகிறேன்