புது மங்கை

புன்னகையை காற்றில் வீசி
மதி மயக்கும் மழலையை
மலர் அவளின் கையில் ஏந்தி
மனம் பறிக்கும் மங்கையே
அச்சம் அதட்டும் பொழுதுகளில்
அன்பின் அரவணைப்பில்
மழலையை மனம் விட்டு
சிரிக்க வைத்தவளே !
புத்தம் புது குளத்தினில்
புதிதாய் தோன்றிய
புது மலரின் வாசமாய்
வீதியினை வசம் செய்தவளே !
மறந்தும் இமைகளை
இமைத்து விடாதே
இமைக்கும் கணங்களில்
உலகமே இருளினில் திண்டாடும் !