மணம் வீசுதே
பிறை கீற்றாய் உன்
நெற்றியில் ஓர்நாள்
பார்த்தேன் சந்தனத்தை ....
மணம் வீசியதோடு
என் மனதையும்
கொள்ளை கொண்டது ....
அன்றிலிருந்து இன்று வரை
சந்தனம் என்று
சொன்னாலும் , பார்த்தாலும்
அதில் உன் நினைவு தான்
குளிர்ச்சியாய், புன்சிரிப்பாய்
என்னுள்
மணந்து கொண்டே இருக்கிறது .....