இதுவுமோர் இலக்கணம்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் காட்டுகளால் மட்டுமே
மாறும் உலக புத்திகள்-நீ
கருத்தரிக்கும் கருக்களுக்கு
மடுக்குமோ செவி ?-எல்லாம்
அவரவர் அத்தியாயங்களில்
நுகர்கின்ற பொழுதினில்-பழுதாகி
போகும் பறந்து போகும் பாழாய் போகும்
பழகி போகும் பகடற்றுப போகுமே
ஆதன் உழுதிடும் உண்மைகள்
யாவும் அம்மண விழிகள்
அழுதும் பெறாது சிறிதும் பாராது
புரிதலில் தோன்றும் திரியும்
தேவைக்கேற்ப மறையும்
இது பகுத்தறிவுப் படலங்கள்
வரலாறு போதும் இனி- செய்க
தினமும் அமுதும் குமுதம்
உயிர்த்தந்த தமிழுக்கு இதுவுமோர்
இலக்கணம்