ஒரு உயிரின் நிராகரிப்பு 555

என்னுயிரே...

பிறையான உன் வெளுத்த
நெற்றியில என்னுயிரே...

இன்னொரு கண்ணைபோல்
திறந்திருக்குமே அந்த அட்டைப்பொட்டு...

அதை எடுத்து என் காதல்
காவியத்தில் ஒட்டிகொண்டேனே என்னுயிரே...

சுடிதாரில் இருந்து ஒருநாள்
நீ சேலையில் வந்தபோது...

நீ முன்னாள் நடக்க நான்
உன் பின்னால் வந்து என்னுயிரே...

அந்த சேலை தலைப்பினை எடுத்து
உனக்கு தெரியாமல்...

என் முகத்தை மெல்ல
துடைத்து கொண்டேன் என்னுயிரே...

இன்று என் கரம் பட்ட மலரும் காதல்
கடிதமும் ஏனடி கசக்கி எறிந்தாய் என்னுயிரே...

நீ எரிந்தது காகிதமல்ல...

ஒரு ஜீவனின் உயிர்
என்பதை நீ அறிவாயா என்னுயிரே.....


[கஜல் முயற்சி]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Feb-16, 3:18 pm)
பார்வை : 1547

சிறந்த கவிதைகள்

மேலே