உன்னை கண்டதால்
காற்று வீசி நிலை மாறும் மரங்கள் போல
வெண் மதியே உன் பார்வை பட்டதால்
இதயமும் நிலை மாறி
தேகமும் உயிர்ப்பு இழந்து
விழியிலும் நீர் கசிந்து
உன் உறவு கிடைக்குமா என
நெஞ்சமும் ஏங்குது
உன்னுடன் சேருவது எண்ணம் ஆனதால்
துக்கத்தையும் மறந்து
ஒளி இழக்குறது என் கண்கள்
அதை தடுக்கவும் நெஞ்சுக்கு தெரியவில்லை

