கறுப்பு தினம்
நொடிகள் என கரையும்
நேரத்தில் காலங்கள்
அத்தனையும் சோகங்கள்
ஆகிறதே!
மாறிப்போன உருவத்தின்
மத்தியிலே மாறயிலாமல்
என் உருவம் தவிக்கிறதே!
காதல் என கோர்த்துநின்று
கடந்த வந்து ஞாயபகங்கள்
காயத்தால் இன்று
கண்டபடி கதறுதடி!!
நேற்று இருந்த நேரங்களை
நீவிவிட்டு பார்த்தபடி என்
நெஞ்சம் மெதுமெதுவாய்
நனைந்தபடி உருகுதடி!
கண்ணீரால் இன்று எனக்குள்
கரைக்கின்ற வார்த்தைகளும்
காண்கின்ற வேதனையை
எண்ணியபடி வேகுதடி!
உன்னை இன்று காண்பதால்
உள்ளங்கை ரேகைகளும்
உணரவிட்ட தீயினிலே
எரிகின்றதை புரிவாயா?
இதயத்திலே உன் உருவம்
இதம்காணா சோகத்தை
இசைகின்ற இசையினை
விழியாலே உணர்வாயா?
மரணநாள் வந்தவுடன்
மாய்ந்திருந்த என்னுடலை
பார்த்தபடி விழியாலே நீ
இருசொட்டு விட்டுவிட்டு அதுபோதும்.அறிவாயா!?
ஜாமத்தின் மத்தியிலே
ஜாணளவும் நகரமால்
அழுதபடி கண்ணீரை
சேகரித்தேன் உனக்காக!
கடந்த வந்த நாட்களை
கவிதையினாய் மொழிபெயர்த்து
காகிதத்தில் உன்வீடுஅனுப்பி
வைத்தேன் உனக்காக!
சுமக்கின்ற நினைவுகளை
சுடர்விட்ட ஓவியம்போல்
தீட்டிவைத்து உன் காலடியைதேடி
வந்தேன் உனக்காக!
தோற்றுப்போன காதலினை
தெரிவிக்கும் விதமாக
கறுப்புதினத்தை கொண்டாட சிலர்
வந்துள்ளார் எனக்காக!