காதல் வாழ்த்துக்கள்

தெருக்களோடு அலங்காரமாய்
ஜோடித்த படி நகரும்
சாலைப் பூக்களின்
வாசம் நுகர்ந்து நடக்கும்
ஆராவாரப் படுகிற இன்றய
வீதிகளிற்கு என் வாழ்த்துக்கள்

நேற்றிரவின் இறுதி நொடிவரை
காற்றாய் பறந்து தேடி
கரைந்து வாங்கிய அன்பளிப்புகளின்
அணிவகுப்பு நடந்தேறும்
நிமிடங்களிற்க்கு
நெஞ்சம் நடுங்க என் வாழ்த்துக்கள்

உயிர் பிடுங்கும் உணர்வுகளின்
தேர்வின் தீர்ப்பை எதிர் நோக்கி
திண்டாடும் மானசுகள்
தேதி பார்த்தபடி நகர்த்திய
கலண்டர்களின் இன்றுடன்
நின்றுகொள்ளும் புள்ளடிகளிற்கு
புன்னகையோடு ஒரு வாழ்த்து

இது வரை இந்த ஆண்டில்
அதிகமாய் அறுக்கப் பட்டு
பூஜித்து கொண்டாடப் படும்
இன்றைக்கென
இதயங்கள் இணைக்க
உதிர்க்கப் படும் ரோஜாக்களிற்க்கு
என் ஒரு துளி கண்ணீருடனான வாழ்த்துக்கள்


நேசங்கள் வெளிக்காட்ட
அளிக்கப் பட்ட அட்டைகள்
ஒரு சில மறைவாய் பொத்திப்
பேணப் படுவதும்
இன்னும் பல கசக்கி கிழிக்கப்
படுவதும் .. தாள்களால் பலர்
தலையெழுத்து பொறிக்கப் படும்
இந்நாளுக்கு என் பொன்னான வாழ்த்துக்கள்

காதலுக்கென்று ஒரு தேதி
வேண்டாம் .. காதல் நாளும்
பொழுதும் நகரும் அழகு
பூக்களாலோ .. பரிசுகளாலோ
புதுப்பிக்கப் படுதலை விட
புன்னகையால் ஒப்பியுங்கள்..
பதில்கள் மறுக்கப் படாது
என்றாலும் . எல்லார்க்கும்
ஒட்டு மொத்தமாய்
என் இனிய காதல் வாழ்த்துக்கள்

சஹானா ஜிப்ரி
(2016/02/14)

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (14-Feb-16, 8:17 am)
Tanglish : kaadhal vaalthukkal
பார்வை : 574

மேலே