ஒருத்தி

காற்றை கிழித்தும்
காலத்தை கிழித்தும்
சென்று கொண்டிருந்த பேருந்தில்
நெஞ்சை கிழித்து கொண்டிருந்தாள்
ஒருத்தி
பனி பொழிந்தும்
வெளிச்சம் பொழிந்தும்
சென்று கொண்டிருந்த வானத்தில்
கற்பனையை பொழிந்து கொண்டிருந்தாள்
ஒருத்தி
இன்னும் எத்தனை ஒருத்திகளோ என கிறுக்கி கொண்டிருந்தது ஒரு எழுதுகோல்
இன்னும் எத்தனை ஒருத்திகளோ

எழுதியவர் : (14-Feb-16, 2:30 am)
சேர்த்தது : நேதாஜிதாசன்
Tanglish : oruthi
பார்வை : 60

மேலே