பசியே

உன்னை உணர்கையில்
பிடிப்பில்லாமல் போகிறது
எந்த வேலையிலும் !

உனக்காகவே
பாடெடுக்கிறேன் ......
எனக்காக சிலமணிகள்
பொறுப்பாயா .....??

புறக்கணித்தால்
புண்ணாக்கி விடுகிறாய்
அமிலம் சுரந்து ....!!

உன்னை நான் மறந்தாலும்
நேரம் தவறாமல்
ஞாபகப்படுத்திக்
கொண்டிருக்கிறாய் .....!!

தாமதித்தால்
இரைகிறாய் .....
அறைகூவல் விடுத்துப்
பத்தும் பறந்திடச் செய்கிறாய் .....!!

பசியே ....!!
நீயில்லா உலகில்
பஞ்சத்திற்கும்
வருமே பஞ்சம் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Feb-16, 12:06 am)
பார்வை : 76

மேலே