மீண்டும் ஒரு திங்கள் கிழமை
திங்கள் கிழமை..
பள்ளிக் குழந்தைகளின்
பிஞ்சுக் கால்களின்
வீட்டுப்பாட இரும்புக்குண்டின்
சங்கிலியை சீருடையாய்
மீண்டும் அணிவிக்கிறது..
பணிகளில் உள்ளவர்கள்
ஞாயிறுகளின் உல்லாசங்களின்
கழுவப் படாத பாத்திரம் பண்டங்களின்
சுமையை முதுகிலேற்றுகிறது..
.
பணி ஓய்வு பெற்றவர்க்கு
முடிவு பெறா வெறுமையின்
வாராந்திர நினைவு படுத்தலை
புதுப்பிக்க வைக்கிறது..
பணி தேடுபவர்கள்
வற்றிக் கொண்டிருக்கும்
நம்பிக்கை விளக்குக்கு
எதிர்பார்ப்பு எண்ணை ஊற்றி
திரி தூண்ட வைக்கிறது..
தெய்வமே..
இன்று திங்கள் கிழமை !