பாசங்கள் சுமந்து
எளிமையின் மிச்ச சொச்சங்கள்
பாதையோர நிழல்களில்
போகின்ற போக்கில்
காண்பவைகளில் உதிர்ந்திட்ட
அதிசயங்களில் பாசங்கள்
பாஷைகளில் வார்த்தையாய்
விவாதிட்டு
நினைவுகளில் நேசங்களை
சுமந்து செல்கின்றன.
என்றோ ஓர்நாள் இவைகள்
ஞாபகங்களாய் மட்டுமே
உதித்திடும் வாழ்க்கையின் ஓட்டத்தில்
அம்மாவுடனும்,உடன்பிறந்தோருடனும்
நகர்த்திட்ட நாட்கள் என்றுமே
திரும்ப அதே நிகழ்வுகளாய் அல்ல
நினைவுகளாய் பகிர்தலும்
இயலாத நாட்களே
நாம் வாழும் கணினி யுகம்.
திரும்பவும் ஒரு மண்சாலை
சாலையோர மரங்கள்
கணினிக்குள் குடிபெயர்ந்தன
எல்லாம் நம்முடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
