காதல் தந்த வலி

உயிர்கொல்லியாய் - என்
உயிர் கொல்கிறது...!
இந்த இரவுகள்...

உறக்கமும் கூடவே
உன் கனவுகளும் வரும்
என் விழிகளில்
இப்பொழுதெல்லாம் ஏனோ
கண்ணிர்துளிகளே வருகிறது...!

விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகளை
துடைத்தெறிந்துவிட்டு
தூங்க முயற்சித்தாலும்,
ஒவ்வோர் இரவும் - எனக்கு
நரகமாகவே நீள்கிறது...!
துடைத்தெறிய முடியாமல் - என்
இதயத்தில் வழிந்தோடும்
உன் நினைவுகளால்...
அன்புடன் """"" இர்பான் """""

எழுதியவர் : இர்பான் (15-Feb-16, 9:41 pm)
பார்வை : 544

மேலே