காதல் தந்த வலி

மவுனம்
மனம் உடைத்தாள் அவள்...!

ஒரு யுக காதலை
ஒரு சிறு வார்த்தையால்
தகர்த்தாள்...!

தீரா காதலென்றவள் இன்று
நேர விரயமென்று - என்
ஈர விழி செய்கிறாள்...!

பாதி கிறுக்கி,
மீதி நொறுக்கி இதயத்தை
வீதியில் வீசி எறிகிறாள்...!

தந்தைக்காய்
எந்தன் காதலின்
நெஞ்சில் உதைத்தாள்...!

காதலென்று என்னை
காயப்படுத்தி மறப்பதற்கு - அன்றே
காதலென்று நான் வந்தபோது
கண்டுகொள்ளாமல்
மறுத்திருக்கலாம்...!

காரணம்...
மறுக்கப்படும் வலியை விட
மறக்கப்படும் வலியே பெரியது...!
அன்புடன் """"இர்பான்"""""...

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 12:09 pm)
பார்வை : 209

சிறந்த கவிதைகள்

மேலே