உயிருக்கு உயிராகி
நேற்று வரை நான் நான்
இன்றோ நான் நீ ...
நிலவு வந்து போகாத இரவுகள்
இதுவரை இருந்துண்டு
இனி நிலவாய் உன் நினைவு
ஒருநாளும் வாராமல் போகாது ...
என் நிழல்
என்னைவிட்டு போக வாய்ப்புண்டு
ஆனால் உன் நினைவு
என் நினைவிட்டு போக
வாய்ப்புக்கு வாய்ப்பு வாய்க்குமோ ...
பருவங்கள் மாறும்
காலம் மாறும்
வாழ்க்கை மாறும்
ஏன் என் உண்மை காதலும் மாறும்
மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும்
என் காதலை வாழ வைக்க மாறும்
உன் இன்பத்திற்காக என்னையும் மாற்றும் ...
நீ என்னை பிரிந்தால்
என் உயிர் உன் விழி கண்ணீராகும்
ஒரு நாள் உன்னுயிர் பிரிந்தால்
அன்று முதல் என்னுயிர் உன் உடலாகும் ...