வெள்ளி நிலவே

நீல வான ஓடையில்
நீந்தலிட்டு பைய சென்றேன்!
நிலை குலையா ஆகாயத்தில்
நிலவின் முகவரி தேடினேன்!
ஆகாய வளாக பாதையில்
ஆயிரம் விண்மீண்கள் கடந்தேன்!
விண்மீண்கள் சிந்தைக்குள் சிறிதும்
விளங்கா வண்ணம் அலைந்தேன்!
வெள்ளி நிலவை ரசிக்க
வெகுதுண்டு தினமும் விரைந்தேன்!
நிலவின் தனிமை போக்க
நித்தமும் எண்ணி துடித்தேன்!
வட்ட நிலவை கண்டவுடன்
வார்த்தை முனைய மறுத்தேன்!
பயத்தில் முனையா வாத்தையால்
பளிச்சிடும் விண்மீன்களின் கேளிக்கையானேன்!
பூசலான கேளிக்கையின் விளைவால்
பூமலர் மனம் நொந்தேன்!
வருடும் வேதனையை பொறுத்து
வலியை மறைத்து சிரித்தேன்!
நெஞ்சோடு மறைத்த வலியை
நிலவின் மௌனத்தில் அறிந்தேன்!
புன்னகையில் பூக்கும் நிலவின்
புரியா மொழியை புரிந்தேன்...........!

பூமலர் மனதை அடைய
புன்னகையால் கவர துடித்தாய்!
அழகிய பூமலரை ஆவலோடு
அள்ளிச் செல்ல முனைந்தாய்!
கட்டழகு வெண்ணிலவால் பூமலர்
கயலவிழியில் கண்ணீர் தழும்பியதே!
கானல் நீரோவென நினைத்தவை
காட்சியில் நெஞ்சம் நிறைந்ததே!
நீண்டகாலம் வெண்மதியின் தரிசனம்
நீள நெஞ்சம் ஏங்கியதே!
மனதில் நிறைந்த ஆசையாய்
மதியின் எண்ணம் கூடுமோ!
எண்ணங்களின் பிரதிபலிப்பாய் வெண்ணிலவு
என்று பூமலர் சேருமோ!

எழுதியவர் : புகழ்விழி (17-Feb-16, 10:29 am)
Tanglish : velli nilave
பார்வை : 108

மேலே