காதல் என்பது 4 எழுத்து - ஆனந்தி

உன் செய்கை-கள்
எனக்கு புரியவேயில்லை
நான் எழுதும் கவிதை
போலவே.....

என் பெயரை சொல்லும்
போதெல்லாம் வருத்தம்
இன்னும் ஒரு முறை
சொல்(லேன்).....

என் தூக்க விற்பனை அற்புதம்
குறைச்சொல்ல வழியின்றி
உன் கண்களுக்குள்.....

கனவுக்குள் புன்னகைக்கும்
உன் பிம்பம்
நினைவினில் முறைக்கும்
என் பிம்பத்தை.
எது உண்மை நீ தான்
சொல்ல வேண்டும்......

தயங்காமல் தள்ளிவிடுகிறாய்
நெருப்பின் மீது
நானோ விழுகிறேன்
பூக்களின் மீது......

ஒரே நேரத்தில்
தூண்டிலும் போடுகிறாய்
தூக்கிலும் போடுகிறாய்
என்ன தான் செய்ய நான்
நீயே சொல்.......

எழுதியவர் : ஆனந்தி.ரா (17-Feb-16, 10:34 am)
பார்வை : 148

மேலே