கார்கி மைத்திரேயி கவிதை - 1

அற்றை திங்கள்மாதத்தில்
அன்றொரு வசந்தகாலத்தில்
காற்றின் அலைவரிசையில்
நாம் சந்தித்தோம் ....

நூலாம்படை பிடித்த என்வீட்டில்
அத்திப்பூ ஒன்று பூத்தது
பிளந்து கொட்டும் வெயிலில்
என்மனதில் பனிமழை பெய்தது .....

காற்றில் காற்றாடியாக பறந்தேன்
நிலவொளியில் நேசம் பார்த்தேன்
காற்றலைகளெல்லாம் கவிதையாக ரசித்தேன்
நீலவானில் நீந்தி நீராடினேன் ...

மனதை சுவையில் நனைத்தோம்
காலத்தை காதலில் கரைத்தோம்
வார்த்தை தீர்ந்தபின்னும் பேசினோம்
உலகத்தை காதலால் மறந்தோம் ....

உருவமெல்லாம் பெரிதல்ல காதலில்
என் உலகமே நீயே என்றாய் ....

இப்பொழுது
நூலில்லா காற்றாடியாக ஒடிந்தேன்
நிலவொளியில் மனநோயை கண்டேன்
காற்றலைகள் எல்லாம் காகிதமாக கண்டேன்
நீலவானின் கண்ணீர் மழையின் நனைந்தேன் .....

காற்றில் தொலைத்த முகவரியைதேடி
அலையும் கடலைகளாக அலைகின்றேன்
மணலில் தொலைத்த மனதைதேடி
மழையாக பூமியில் அழுகின்றேன் ....

இதயம் பேசுகின்ற வேளையில்
நாடி நின்று போனால் நியாயமா
மலரின்வாசம் காற்றுடன் கலந்தபின்பு
மலரின்வாசம் காற்றைவிட்டு பிரிந்தால் நியாயமா ......

சம்பா அறுவடை செய்யும் முன்னே
அம்பா அரலையாக அழித்தால் நியாயமா
என்காதல் காவியமாகும் என்பது எனக்குதெரியும்
அதில்தெரியும் ஓவியம் நீதானேன்பது உனக்குதெரியுமா .....

மனதில் நொடிக்கு ஆயிரம் தடவை அங்கபிரசட்சனம்
செய்தால் உனக்கு அனுக்கிரகம் அளிக்காமல்
என்னால் இருக்க முடியுமா ...

நீ என்னிடம் கூறாத வார்தைஒன்றுயிருந்தது
என்னைமறந்து விடு என்று
அதையும் இன்று கூறிவிட்டாய் ...

நீயும் நானும்
கைகோர்த்து செல்லவும்யில்லை
கையில் காதலுமில்லை
காற்றலையில் தொலைத்த நினைவலைகள்
கடலலையாக இதயத்தில் ஓதுகிறது ....

இரத்த நதியில் நீரெடுத்து
மனதாறில் மண் எடுத்து
காதல் சிற்பம் செய்துள்ளேன்
உன்னை என் இதயத்தில் ....

ஆனால் நீயோ
என் இதயபேழையில் புழைபோட்டு
சாப்பறை பாடிவிட்டாய் .....

நீ எவ்வளவுதான் வெறுக்கனுமோ வெறுத்துக்க
இவ்வளவுதான் என்காதல்னு யாராலும்
அளக்க முடியாதயளவுக்கு நான்உன்னை காதலிப்பேன் ....

--------------------------------------------------------------------------------
குறிப்பு : நான் இந்த கவிதை காட்சி பிழை - 38 எழுதினேன் ....
எழுத்து பிழை இருந்ததால் என்னால் பதிவிட முடியவில்லை .....

எழுதியவர் : mahalakshmisrimathi (17-Feb-16, 3:01 pm)
பார்வை : 69

மேலே