கார்கி மைத்திரேயி கவிதை - 2

எனக்கு கஸல்கவிதைகள்
எழுத தெரியாது ..
ஆனால் உன்னை
கஸலாக வர்ணிக்க தெரியும் ...

வெண்ணிறவானில் மறைந்திருக்கும்
கார் முகிலே
உன் பார்வை
என் ஆன்மாவின் கார்திரையை
கிழித்து எரிக்கிறதே ....

உன் கண் இமையின் சிறகுகள்
என் மனதறையில்
ஆயிரம் பறவைகளாக பறக்கிறதே ...


உன் வெண்விழிகளில்
என் இருதயத்தில்
வர்ஷம் வரமாய் பொழிகிறதே ....

இரவில் மலரும் நிலவுபோல
பகலில் ஒளிரும் கதிரவன்போல
என் அல்லும் பகலும்
உன் கண்மணி பூக்களால் மலருகிறதே ...

வானில்மேகம் மறையும் ஓர்நொடிபோல
உன் மனம்
என் மனதைவிட்டு மறையும் ஓர்நொடி
என் மனதினுள் பூகம்பம் மறைந்து செல்லுமே ....

உன் இதழில் வழியும்
புன்னகை நதியிலே
என் உயிரில்
இரத்த ஓட்டம் பாயுமே .....

என் மனதில்
மழை தூவும் நிலவே ....
என் கனவிலும்
என் நினைவிலும்
மலரும் மலரே ....

என் சரிடத்தில் உன்சிரமே ....
என் சிரத்தில் உன் நினைவின் நரம்புகளே
..
என் திங்களெல்லாம்
உன் மான்விழியிலே ....
உன் அருகே மிளிரும்
நட்சத்திரமாக என்கண்கள் .....

உன் தெளிவான வானத்தில்
உதிக்கும் சூரியனாக என் ஆன்மா ....

என் ஆன்மாவின் அம்பலத்து
சிற்பமாக உன் உருவம் என்னுள்ளே ...

எழுதியவர் : (17-Feb-16, 3:02 pm)
பார்வை : 98

மேலே