வாழவிடு

காதல் மழையில் நனைந்து
காயம்பட்ட நான்.....
போதை மழையில் நனைய நினைத்து
மதுகடைக்குச் சென்றிருந்தேன்....
அங்கும் நிம்மதியில்லை.....!
அறையில் அமர்ந்திருந்த
ஆடவர் கூட்டமெல்லாம்
என்னவளின் பெயரைச்சொல்லி
அழுது புலம்பியபோது....!!
என்னவளைக் காதலித்து......
மாணவர் கூட்டமெல்லாம்
மதுக்கடையில் கல்வி கற்க.....!
மகிழ்ச்சிப் பெருக்கில் பெற்றோர் கூட்டமோ
அடியெடுத்து வைக்கிறது....
அனாதை ஆசிரமத்தில்.....!!
என்னடி கொடுமையிது...?
இறக்கமற்ற என்னவளே.................
-சதீஷ் ராம்கி.