பயணித்த காதல்

பாதையில் பயணிக்கையில்
பாதம் படாத சுவடுகளாய்
உன் நினைவுகள்

கனவில் கூட
நிலையாக இருக்கவில்லை
நம் காதல்

எந்தன் உயிர் கொண்டு
உந்தன் பாதங்களைத் தேடுகிறேன்
உன் சுவடுகளைச் சேகரிக்க

மூச்சுக்கூட திணரறுகின்றது
உணர்கின்ற
உன் நினைவுகளுக்கு


சாலையில் கூட
கூடை கூடையாய்
உள்ளது நான் கொண்ட
காதல் குப்பையாய்
உன் விருப்பம் இன்றி


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேனை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (17-Feb-16, 4:48 pm)
Tanglish : payaniththa kaadhal
பார்வை : 269

மேலே