புறக்கணித்தீர் மக்களே

புறக்கணித்தீர் மக்களே!
ஏரிக்கரையோரங்களில்
என்னை…..?
பார்க்கலாம்
கரைக்கு காவலாய்
நின்றிருப்பேன்!
என்றன் ஓலைகளில்
எத்தனையோ….
இலக்கியங்களும்…காவியங்களும்
படைக்கப்பட்டுள்ளன!
என்றன் பழங்களோ
நார்களால் ஆனது
சுவையோ மாம்பழத்திற்கு
இணையானது!
ஆனால்….தின்ன வேண்டுமென்றால்
என்னைச் சுடவேண்டும் தீயில்!
என்றன் பாளைகளின்
கண்ணீர்….
போதைகளுக்குள்ளாக்கும்
நான் தனியாயிருந்தால்
என்றன் நீரை
அலாதியென்றே ஆராதிப்பர்!
கோடைக்காலங்களில்
ஏழைகளின்
குளிரூட்டும் கனியாவேன்!
நான் வடிக்கும் நீரினை
பானையில் இறக்கினால்
பனை கள் என்பார்கள்!
பனை மரமென்பார்கள்
புறக்கணித்தீர் மக்களே!
----கே. அசோகன்.