கைத்தடி இல்லாமலே

கைத்தடியுமில்லாமலே!
நடைப் பயில
நடைவண்டி ஒன்று!
நடந்த பின்னே
ஓட்டுவதற்கு
மிதிவண்டி ஒன்று
பதின்ம வயதினிலே
பறக்கின்ற பல்சர் ஒன்று
இப்படி வாங்கி தந்தவரோ
வயது முதிர்வால்
நடப்பதற்கே தள்ளாடுகிறார்……!
கைத்தடியுமில்லாமலே!
பார்த்து….பார்த்து
பக்குவமாய்
பொங்கிப் போட்டவளோ…
பருகுவதற்கு….
பழங்கஞ்சிகூட
இல்லையென்றே
புலம்புகின்றாள் !
---- கே. அசோகன்.