உணர்வார்களோ

உணர்வார்களோ?

கழிப்பறைகள் ஏதுமில்லை
கிராமங்களில்!
அலைபேசிகளோ
அவரவர் பைகளில்
ஆயிரமாய் !

குடிநீர் விலையோ
ஏறப்போகுது உச்சம்!
அலைபேசி விலையா
குறையுது மிச்சம்!

விளைநிலங்களில்
விளைச்சலோ காணவில்லை!
விண்ணுயர் அலைபேசி
கோபுரங்களோ கணக்கிலில்லை!

இதுதான் வளர்ச்சி….
இதுதான் ஏற்றமென்பார்கள்
உண்பது தானியங்கள்தான்
உணர்வார்களோ ?


--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (18-Feb-16, 9:04 pm)
பார்வை : 78

மேலே