தொலைந்து போகிறேன்

தொலைந்து போகிறேன் !
முதிய பாட்டியே!
முக-வரிகளெல்லாம்
அளப்பிட முடியா
அனுபவக் கீற்றுகளோ?

பொருள்பொதிந்த
முகத்தைக் கண்டபின்னே
என் முகம்
எதிர்காலத்தில்
எப்படியோ ? ஐயமுற்றேன்

அனுபவ கீற்றுகளுடனே..
அழகாய்த்தான் இருக்கிறாய்
புன்னகை பூத்துவிடு!

முக-வரிகளிலும்..
புன்னகையிலுமே…
தொலைந்து போகிறேன்
நான் !

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (18-Feb-16, 8:59 pm)
பார்வை : 243

மேலே