அனாதை வர்க்கம்

சின்னஞ்சிறு வயதினிலே
சீராட்ட எவருமின்றி...
செக்கிழுக்கும் அடிமாடானேன்...
சீர்கெட்ட இந்த நாட்டினிலே.........!

உதவிக்கரம் நீட்டி
உயிர் கொடுக்க எவருமின்றி
ஊசிநூலை கையிலெடுத்தேன்
ஒருசாண் வயிற்றிக்காக.....!!

அனாதை வர்கத்திற்கு
கல்விக்கடன் இல்லையாம்.......

அன்புள்ளம் கொண்டோர் சிலரை
கேட்டுத் தெரிந்து கொண்டேன்....!

கண்ணில் பல கனவுகளோடு
காத்திருக்கும் எனக்கு.....
கல்விச் சாலை செல்ல வழியில்லையாம்....!

கொலைக்குற்றம் ஏதுமின்றி
தண்டனை அனுபவிக்கிறேன்
வறுமையெனும் சிறைச்சாலையில்....!!

-ஏழைகளின் தோழன்

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (19-Feb-16, 4:10 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
Tanglish : anaadhai varkkam
பார்வை : 2481

சிறந்த கவிதைகள்

மேலே