திருப்பூவணம் பதிகம் 11

"புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே" 11

பதவுரை:

புண்ணியர் - புண்ணியம் செய்தோர்கள்
பண்ணிய – இயற்றியருளிய,
பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும்
பறைதல்:
1. To vanish, disappear; அழிதல். பரவுவாரவர் பாவம் பறையுமே (தேவா. 1213, 11).
2. To be wasted, worn out or impaired; தேய்தல். நெடுஞ்சுவர் பறைந்த கொட்டில் (பெரும்பாண். 189).

பொருளுரை:

புண்ணியம் செய்தோர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற தலைவரை, சிவபெருமானை, அவர்தம் திருவடிகளைத் தொழுது போற்றி, அழகிய, குளிர்ச்சியான சீர்காழியில் அவதரித்த அருமறைகள் கற்ற ஞானசம்பந்தன் இயற்றியருளிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாடுபவர்களின் பாவம் யாவும் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-16, 8:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே