விவசாயம்

விவசாயிகளுக்கு புதிய திட்டம்
ஏப்., 14ல் அறிமுகமாகிறது
சீகோர்,: ''விவசாயிகள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, நாட்டில், எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு, தங்களுடைய உற்பத்தி பொருட்களை, ஆன்லைன் மூலம் விற்கக் கூடிய திட்டம், வரும், ஏப்ரல், 14ம் தேதி அறிமுகம் செய்யப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.



சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சி, பா.ஜ., ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சீகோரில்நேற்று நடந்தது.வேளாண் காப்பீட்டு

திட்டம், மண்வளப் பரிசோதனை அட்டை உட்பட விவசாயி களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து, இந்தநிகழ்ச்சியில் விளக்கி பேசினார் பிரதமர் மோடி.

அப்போது, ''விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு, நாட்டில் எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்கக் கூடிய, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வசதி, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளான, ஏப்ரல் 14ல் அறிமுகம் செய்யப்படும்,'' என்றார் மோடி.

மறுப்பு:இதற்கிடையே, வாரணாசி, பனாரஸ் ஹிந்து பல்கலை கழகம் அளிக்க முன்வந்த, கவுரவடாக்டர் பட்டத்தை, பிரதமர் மோடி, நேற்று ஏற்க மறுத்தார்.

முக்கிய அம்சங்கள்
* விவசாயிகளின் வருவாயை, 2022க்குள் இரட்டிப்பாக்க இந்த திட்டம் உதவும்
* விவசாயத்திலும், 'ஸ்டார்ட் - அப்' முயற்சி வேண்டும்
* நவீன தொழில்நுட்பங்களுடன், பாரம்பரிய


விவசாய முறைகளை இணைப்பதன் மூலம், அதிக மகசூல் பெறலாம். உள்நாட்டு தேவை போக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், தேசிய வேளாண் சந்தை என்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறை கொண்டு வரப்படுகிறது

எழுதியவர் : (19-Feb-16, 2:44 am)
பார்வை : 216

சிறந்த கட்டுரைகள்

மேலே