பால்யம் குழந்தை பருவம் தொலைந்தது எப்போது

1. குட் மார்னிங் டீச்சர் என்பதை குட் மார்னிங் மேம் எனும் போதே தொலைகிறது குழந்தை பருவம் .
2. பாட்டில் மூடியை வாயில் கடித்து திறக்கும்போதே தொலைகிறது நம் பால்யம்... (நான் கூல்டிரிங்ஸ் பாட்டில சொன்னேன்)
3.ரயிலுக்கு டாட்டா காமிப்பதை நிறுத்திய போது தொலைந்து போயிருந்தது பால்யம்.
4.எப்ப நான் சினிமாவுல ஹீரோவ கவனிக்காம ஹீரோயின கவனிக்க ஆரம்பிச்சனோ அப்பயே தொலைந்து போயிருந்தது பால்யம்.
5.எக்ஸாமுக்கு, என்னைக்கு படிச்சிட்டு போறத நிப்பாடினேனோ அன்னைக்கே எனது பால்யம் முடிவுக்கு வந்துவிட்டது..
6. ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை நிறுத்தியலிருந்து நின்றுபோனது எனது பால்யம்
7."இங்கிலாந்து லெட்டர்" இன்லேன்ட் லெட்டர் ஆன போது என் தொலைந்தது பால்யம்
8.சட்டை நிறத்தை கூட கவனிக்காமல் விலையை முதலில் தேட ஆரம்பித்த வயதில் தொலைந்து போயிருந்தது என் பால்யம்
9.முழுக்கை சட்டை வாங்கி அதை மெனக்கெட்டு மடிச்சிவிட்டுட்டு அரைக்கையோடு திரியும் போது தொலைந்தது என் பால்யம்
10.அப்பா கைஎழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்டில் போட்டு கொள்ளும் போதே முடிந்து விடுகிறது பால்யம்
11.என்னைக்கு டீயுசன்ல கேர்ள்ஸ் தனியா பாய்ஸ் தனியா உட்கார வெச்சாங்களோ அன்னைக்கே பால்டாயில் குடித்து மரித்து போனது என் பால்யம்
12. கோபால் பல்பொடியிலிருந்து க்ளோசப் பேஸ்ட்டுக்கு மாறும் பொழுது பால்யம் தொலைகிறது
13.இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த,
கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும்
வீடு மாறும்பொழுது தொலைந்து போனது அன்னைக்கே மரித்து போனது என் பால்யம்
14.தேசிய கீதப் பாடலை பாடாமல் முணுமுணுக்கும் போது முடிந்துவிடுகிறது
15.பெண் வலிய வந்து என் கன்னத்தை கிள்ளி சிரிப்பதை நிறுத்திய போது என் பால்யம் முடிந்திருந்தது.
என்றேனும் ஓர் நாள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தொலைத்த என் பால்யம் நோக்கி திரும்பி செல்லவே ஆசை !
-களவாணி பய

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 8:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 74

மேலே