ஒரு சுகம்

தனிமையை கண்டு அழுதநாளில்
தனியாய் வந்தாய்!
காதலை தந்தாய்!

வெறுமை என்று புலம்பியநாளில்
வாவென்று அழைத்தாய்!
அணைத்து கொண்டாய்!

இதுபோல் இருந்த நாள்கள்
இனிக்குது பெண்ணே!
இதயம் முன்னே!

காதல் இல்லா வாழ்க்கையோ
நரகம் தானோ?!
வாழ்ந்தால் வீணோ?!

சோகம்கூட சுகமே ஆகும்.
காதலின் ருசி!
காதலை ரசி!

கோடி நன்றி உனக்கு.
காயம் அழித்தாய்!
காதல் தந்தாய்!

சுற்றியெங்கும் அவளின் முகம்.
காதல் வயம்!
கற்பனை வளம்!

நடப்பது உனக்கு ஓடுதல்
காதல் முத்தி!!
அழியும் புத்தி!

அளவு மீறினால்ஆளம்தானோ
புரிந்து செல்!
உள்ளதை கொள்!

தனிமையின் மருந்து காதலி!
காதலில் நினை !(அவளை)
கல்யாணத்தில் அணை!

காதலியால் வாழ்வு செழிக்கும்!
காலடியில் கிட!
கால்கொலு தொட!

காதல் காட்டும் காதலி
என்ன வேண்டும்?
என்னை வேண்டும்??

எழுதியவர் : (21-Feb-16, 7:32 am)
Tanglish : oru sugam
பார்வை : 122

மேலே