JNU விவகாரம் பற்றிய சில கேள்விகள்

JNU விவகாரம் பற்றிய சில கேள்விகள்

1. கண்ஹைய குமார் ஒரு 28 வயசு நிரம்பியவர்.PHd அல்லது MD Medicine படிப்பவர்கள் 28 வயதிற்குள் முடித்து விடுவார்கள்..இவர் ஏன் முடிக்கவில்லை?

2. பெரும்பாலான மாணவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. 25 வயதிலிருந்து 28 வயது வரை உள்ளவர்கள்.. அவர்கள் படிப்பு மட்டுமல்லாது சம்பாரிக்க வேண்டிய சூழலும் உண்டு..அப்படியிருக்க இவரும் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவரே.. அப்படி இருக்கும் போது இவர் ஏன் சம்பாரிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்திருக்கிறார்?

3. இப்போது அவருக்காக வாதாட கபில்சிபில் வருகிறார்.. அவர் ஒரு நாள் வாதாடவே பல லட்சம் வாங்கும் வழக்கறிஞர்.அப்படிருக்க இதற்கான பணத்தை யார் தருகிறார்கள்?

4. பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதிகளிலும் தங்கியும், உணவகங்களில் உணவருந்தியும் படித்து வருகிறார்கள்..இதகேல்லாம் நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது. இவரை போன்ற லட்சிய மாணவர்கள் வரி செலுத்துவோருக்கு சுமையாகும்.. இந்த லட்சிய மாணவர்களை அந்த லட்சியம் சார்ந்த கட்சிகளே படிக்கவைக்கலாம் , இவர்கள் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு நிதி கொடுக்கலாம்..

5. அவர் பீகார் தேர்தலுக்கு ஒரு 3 மாதங்கள் பேரணியில் சென்றார். இந்த பேரணிக்கு சென்று ஆகும் செலவு செய்ய வறுமையில் வாடும் இவரது குடும்பத்திலிருந்து அனுப்பி வைத்தார்களா? அது மட்டுமின்றி phd செய்ய தரும் நிதி யாருடையது?

6. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இது சரி தவறு என்று யோசிக்க வேண்டும். இது எல்லாம் தப்பான அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது..TRP (Television Rating Point )காக ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சிகள்,விவாதங்கள், எதிர்மறை கருத்துகள் பரப்பப்படுகிறது .

7. இது போன்ற சம்பவங்களை வளர்த்து ஆளும் கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கி, அவர்களுன் செயல்களை முடக்கி, இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது தான் இவர்களின் நோக்கம்.

8. அப்பாவி மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..சிறந்த உதாரணம்: அரவிந்த் கெஜ்ரிவால், இவர் மாணவ சமுதாயத்தையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்து, இன்று அவரின் நிலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..பதவியை தக்கவைப்பது மட்டும் தான் அவரின் வேலை.. வாக்குறுதிகள் காற்றோடு போய் விட்டது ..

ஜெய் ஹிந்த்...

- படித்தது
தமிழாக்கம் : வைஷ்ணவதேவி

எழுதியவர் : படித்தது (21-Feb-16, 5:44 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே