என் தமிழ் அன்னை உன்னை மறப்போமா

என் தமிழ் அன்னையே
உன்னை மறப்போமா
எங்களுக்கு ஒரு அடையாளம் தந்து
உலகத்துக்கு அறுமுகபடுத்தியவள் நீ
அதனால் உலகத்தில்
இன்று தலை நிமிந்து நிக்கிறோம்....
தேன்சுவை போல தெவிட்டாத அமுது நீ
தேனை மீது சுற்றி வட்டம்விடும் தேனீ போல
தமிழ் அன்னை உன்னை
நாங்கள் வட்டம் இடுகுறோம்
காதல் வீரம் பேசும் எம் மண்
வாசனை இலக்கியங்கள்
அது எங்களுக்கு உனக்கும் இருக்கும்
தொப்புள் கொடி உறவை
கண்ணாடி விம்பம் போல
படம் பிடித்து காட்டுது
உன்னின் அன்பு மொழியின்
இசை தாலட்டு கேட்டு
மெய் மறந்து போகுறோம்....
பிற நாட்டவர் கைகூப்பி
தொழும் தமிழ் அன்னை நீ
உனக்கு இணையான தாய் ஒருவரும்
நாம் கண்டதில்லை என் தமிழ் அன்னையே
தன் மானம் இல்லாத மாந்தர்கள் போல
தன் விட்டு புதையலை புதைத்துவிட்டு
வெளிநாட்டில் பிச்சை எடுத்து
அவன் மொழியை தன் மொழியாக
கருதும் முட்டாள்கள் இருந்தாலும்
தமிழ் அன்னையே நாம் உன்னை வாழ வைப்போம்....