மகுடபதி
நம் பாரம்பரியம்
காத்திடும்
தகப்பா.....
நான்
உன் மரபின் பாதி...
கருவறை
தாண்டினும்
என்னை சுமந்த
தகப்பா....
நீ
கங்காரு ஜாதி...
புழுதிமண்டலம்
உன்னைச்சூட ....
வியர்வையால்
நீ எனக்கேற்றினாய்
மதிஜோதி....
நாளை
என்னை நாடும்
மகுடங்கள்
எல்லாம்
உன் புகழ் பாடும்.....
"தகப்பா நீயே ஆகச்சிறந்த மகுடபதி" என்று.....