நீ வரும் வரை-17

நீ வரும் வரை-17

காதல்!!!.....
என்னையும் உன்னையும்
ஒற்றை வார்த்தைக்குள்
இறுக்கி வைத்த காதல்
தண்டனை அல்ல...
சுகமான சொர்க்கம்!!!....

(முன்கதை சுருக்கம்- தன் குடும்ப சந்தோஷத்துக்காக பிரியா ரவியை காதலிக்கவில்லை என்று பொய் கூறி அவனை அனுப்பிவிடுகிறாள்...ரவியோ பிரியா தன் காதலை மறுத்ததால் மனம் உடைந்து அங்கிருந்து செல்கிறான்...திரும்பி வந்த பாலா பிரியாவின் முகத்தை பார்த்தே அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவளை ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்கிறான்)

பிரியா நீ ரூம்ல ரெஸ்ட் எடு, எல்லாரும் வர வரைக்கும் நான் ஹால்ல இருக்கேன்...உன் மூட் சரி இல்லன்னு தெரியுது, ஆனா அதுக்கான காரணத்த உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு.. நான் உன்ன கட்டாயபடுத்த மாட்டேன் என்று கூறிவிட்டு பாலா ஹாலில் இருந்த சோபாவில் உட்காந்துகொண்டான்...

அதற்க்கு மேல் அவனிடம் எதுவும் கூற முடியாத நிலையில் இருந்த பிரியா பதில் எதுவும் சொல்லாமல் அவள் ரூமுக்கு சென்று கதவை சாத்தி கொண்டாள்..

நிம்மதியும் இல்லாமல் அழவும் முடியாமல் பிரியாவின் மனம் தவித்த தவிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை...

கடைக்கு சென்ற எல்லாரும் வீட்டுக்கு வந்துவிட ஹாலில் இருந்த பாலாவை பார்த்த பிரியாவின் அம்மா "என்ன மாப்ள நீங்க வர லேட் ஆகும்னு நினச்சா எங்களுக்கு முன்னாடி வந்துடீங்க" என்று கேட்க....
" அதுவந்து அத்த பிரியாவுக்கு தலை வலின்னு சொன்னா, அதான் சீக்கிரம் வந்துட்டோம், அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்கறா...நீங்க வந்ததும் சொல்லிட்டு போகலாம்னு தான் வெயிட் பண்ணேன், கிளம்பறேன் அத்தை" என்று விளக்கம் குடுத்துவிட்டு அதற்க்கு மேல் நிற்காமல் பாலா கிளம்பிவிட்டான்....

இதை பெரிதாக யாரும் எடுத்து கொள்ளவில்லை.. திருமண வேலைகள் சுமூகமாவே நடந்து கொண்டிருந்தது..அவள் ரவியை பார்த்து மூன்று நாள்கள் முழுதாக முடிந்துவிட்டது, அதற்கு பிறகு ரவியை அவள் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை....தான் சொன்னதை உண்மை என்று நம்பி ரவி ஊருக்கு போயிருப்பான் என்று பிரியா நினைத்துகொண்டாள்...திருமண நாள் நெருங்க நெருங்க அவள் மனதுக்குள் பயம் எகிறிக்கொண்டே இருந்தது...

தன்னை சுற்றி எல்லாரும் ஆனந்த கொண்டாட்டத்தில் இருக்க, தன்னால் மட்டும் நிம்மதியாக கூட இருக்க முடியவில்லையே என்று அவள் மனது பெரும் பாடு பட்டது....முன்பாவது அவன் காதலிக்கவில்லை என்று நினைத்துகொண்டு மற்றவர் சொல்வதை கேட்டு அவள் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தாள்...

ஆனால் இப்பொழுதோ, உண்மை தெரிந்துவிட்டது, அவன் இவளை காதலிக்கிறான்....இவளையே நினைத்துகொண்டு இவ்வளவு தூரம் இவளுக்காகவே வந்திருக்கிறான்...அப்படிப்பட்டவனை இவள் சொன்ன ஒரு வார்த்தை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்று நினைத்து பார்க்கும்போதே இவள் கண்களில் இருந்து இத்தனை நாளாய் வர மறுத்த கண்ணீர் ஆறாய் கொட்டியது....

தூங்கினாலும் அவன் நியாபகமே, சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் அவன் நினைவால் தன் இயல்பு வாழ்க்கையையே தொலைத்து நின்றாள் பிரியா...

இன்னும் திருமணத்திருக்கு ஒரு வாரமே இருக்கும் நிலை...பாலா மறுபடியும் பிரியாவோடு பேசவில்லை... அவன் என்ன நினைத்திருப்பான் என்று கூட பிரியாவால் ஊகிக்க முடியவில்லை...அவள் கண்ணை மூடினால் ஒரு பக்கம் ரவி, காதல் விரக்தியால் தாடி வளர்த்திக்கொண்டு வாழ்க்கையையே தொலைத்து கடைசியில் ஒரு விபத்தில் உயிரை மாய்த்து கொண்டது போலவும்...இன்னொரு பக்கம் பாலாவோ திருமணத்தன்றே பிரியாவின் காதலை அறிந்து கொண்டு தாலி கட்டாமல் எல்லார் முன்னிலையிலும் " இவள் எனக்கு துரோகம் செஞ்சுட்டா, இவ இன்னொருத்தன காதலிச்சிட்டு இப்ப எந்த தைரியத்துல என்ன கல்யாணம் பண்ண வந்துருக்கான்னு தெரியல...என்னால இவள கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று தாலியை விசிறி எறிந்து மண்டபத்தை விட்டு வெளியேறுவதை போலும் மாறி மாறி கனவாய் வந்து பிரியாவை பயமுறுத்தி கொண்டிருந்தது....

இப்படி மட்டும் நடந்தால் கல்யாண மண்டபத்தில் எல்லார் முன்னிலையிலும் இவள் காதலை பற்றி பாலா விமர்சித்தால் என்ன நடக்கும்...எல்லாரும் இவளை பற்றி என்ன நினைப்பார்கள்...தன் குடும்பத்திற்கும் அவமானம், தனக்கும் அவமானம்...என்ன செய்வது, புரியாத புதிராய் தன் வாழ்க்கை சிக்கி கொண்டிருப்பதை நினைத்து அழ துவங்கினாள் பிரியா....

தன் குடும்பத்திற்கும் அவமானம், ரவியும் தன்னால் பாதிக்கபடுவான்..பாலாவையோ ஏமாற்றியதை போல் ஆகிவிடும்...இதை எல்லாத்தையும் மாற்ற என்ன செய்வது என்று யோசிக்க யோசிக்க பிரியாவுக்கு பைத்தியம் பிடித்ததை போல இருந்ததே தவிர வேறு எதுவும் தோணவில்லை...

கடைசியாக அந்த முடிவுக்கு வந்தாள், அது தான் சரியான முடிவு....இது எல்லாத்துக்கும் சரியான முடிவு அதே தான் என்று நினைத்து செயல் படுத்தவும் துணிந்தாள்...அப்பொழுது தான் அவளுக்கு பாலாவிடம் இருந்து கால் வந்தது,அவன் ஹலோ கூட சொல்லாமல் , "பிரியா உடனே கிளம்பி வா, உன்கிட்ட நான் உடனே பேசி ஆகணும்" என்று எங்கு வரவேண்டும் என்ற இடத்தையும் கூறி பிரியாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்தான்....

பிரியாவோ ஏற்கனவே தான் எடுத்த முடிவுக்கு பாலாவின் அழைப்பு சாதகமாய் மாறிப்போனதை நினைத்து பாலாவை சந்திப்பதே சரி என்று கிளம்ப தயாரானாள்...வீட்டில் எல்லாரிடமும் தான் சில நண்பர்களுக்கு கல்யாண அழைப்பு சொல்லபோவதாக கூறிவிட்டு பாலா சொன்ன இடத்திற்கு தான் எடுத்த முடிவோடு சென்றாள் பிரியா...

அங்கு பிரியாவோ தான் சந்திக்க போகும் விபரீதத்தை அறியவில்லை....

பாலா சொன்ன இடத்திற்கு பிரியா சென்றதும் அவளுக்காகவே கதவு திறக்கப்பட்டு, ஹாலில் சோபாவில் பாலா அமர்ந்து கொண்டிருந்தான்...பிரியாவோ தெளிந்த மனதோடு அவள் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் அவன் முன்னே அமர்ந்தாள்...

பாலா என்ன எதுக்கு வர சொன்னிங்க? என்கிட்ட என்ன பேசணும் என்று பிரியா கேட்க பதில் எதுவும் கூறாமல் பாலா பிரியாவையே பார்த்து கொண்டிருந்தான்...

சிறிது நேரம் பிரியாவையே பார்த்து கொண்டிருந்த பாலா ஒரே கேள்வி தான் கேட்டான்..."பிரியா நீ யாரையாவது லவ் பண்றியா?"
பிரியா என்ன தான் தெளிவான முடிவோடு வந்திருந்தாலும் எடுத்த எடுப்பில் பாலா கேட்ட இந்த கேள்வி பிரியாவை கொஞ்சம் தடுமாற செய்துவிட்டது...

அது வந்து.......என்று இழுத்தவளை பார்த்து மீண்டும் கேட்டான் பாலா...
"பிரியா உண்மைய மட்டும் சொல்லு, நீ யாராவது லவ் பண்றியா??"
"ஆமா பாலா, ஆனா இப்போ இல்ல" என்று பாதி உண்மையும் மீதி பொய்யுமாக பிரியா கூற இதை ஏற்க மறுத்தான் பாலா...
இல்ல பிரியா, நீ பொய் சொல்ற...எனக்கு நீ சொல்றதுல நம்பிக்கை இல்ல...இந்த கல்யாணத்துலயும் விருப்பம் இல்ல..நானே இந்த கல்யாணத்த நிறுத்த போறேன், இதுக்கு மேல உன்கிட்ட பேச எதுவும் இல்ல என்று கூறிவிட்டு சட்டென்று பாலா திரும்ப இப்போ பாலா கல்யாணத்த நிறுத்திட்டா???

கல்யாணம் நடக்க போறதா நினைச்சிகிட்டு வீடே கலகட்டிட்டு இருக்கு...இப்படிப்பட்ட சூழ்நிலையில பாலா என் காதல காரணம் காட்டி கல்யாணத்த நிறுத்திட்டா???

அதுக்கு மேல் பிரியாவால் யோசிக்க கூட முடியவில்லை...தான் எடுத்த முடிவு இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது என்று புரிந்துகொண்டாள், தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்று எண்ணியபடியே நிற்கமுடியாமல் சரிந்து விழுந்தாள்...
பிரியா கீழே விழுந்த சத்தம் கேட்டு திரும்பிய பாலாவோ பிரியாவுக்கு என்ன ஆச்சு என்று புரியாமல் ஒருவேளை அவள் தவறான முடிவை எடுத்திருப்பாளோ என்ற குழப்பத்தில் டாக்டருக்கு கால் செய்தான்...

தான் அவளிடம் இப்படி மூர்க்கத்தனமாக பேசி இருக்க கூடாது என்று பிரியாவின் வாடிய, பரிதாபமான முகத்தை பார்த்து வருத்தப்பட்டான்...

எழுதியவர் : இந்திராணி (23-Feb-16, 10:47 am)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 325

மேலே