நட்சத்திரம்
வானம் எனும் நீல நிலத்தில்....
இறைவன் விதைத்த நெல் மணி...
உன்னை எண்ணுவதற்குப் போதாது என் இரு கண்மணி...
பகலில் கண்ணுக்குத் தெரியாத சிறிய பளிங்குக் கல்..
இரவில் நிலவுடன் சேர்ந்து வானை அலங்கரிக்கும் அழகிய கூழாங்கல்...
உன்னுள் இருக்கும் பலவகை வண்ணம் ....
உன்னை ஒரு நாளாவது எண்ண வேண்டும் என்பது என் எண்ணம்...