உனக்கான காத்திருப்பு
தூக்கம் தொலைந்து போனது...
விடியல் முன்னிரவே வந்துவிட்டது
படுக்கைக்கு செல்லும் முன்
பாய் தலையணையோடு
மறவாமல் கடிகாரமும் எடுத்துக்கொண்டேன்...
இரவின் நிசப்தத்தில்...
நிலவின் ஒளியிடையே
விண்மீன்களோடு உன் நினைவுகளையும் ..........
.................எண்ணிக்கொண்டிருந்தேன்...
உறக்கக்கலக்கத்தில்
திரும்பிப் படுத்த தோழியிடம்...
நிலா அழகாயிருக்கில்ல ? என்றேன்...
கலக்கத்துடன் அவளோ....
கனவா ? என்றாள்
நானோ மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்...
கனவல்ல ...
உன் நினைவென்று...
கடிகாரத்தின் "டிக் டிக் " ஒலியிடையே
இசையுடன் துணையாய் வந்தது...
என் செல்போன்
அதிகாலையில் எழுந்து...
அவசரமாய் குளித்து ...
உனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்து...
கண்ணாடியை பார்த்து கண்ணடித்தேன்....
காலை உணவையும்
உண்ண மறுத்தது மனம்....
உன்னை காணும் ஆவலில்....
நினைவுகளோடு பயணிக்கத்தொடங்கினோம்...
நானும் என் மனமும்....!
கீதா பரமன்