தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-13
“ஓ ! லைலா.. லைலா… லைலா….!
என்னை லய்க்கு பண்ணு லைட்டா !
ஓ ! ஒய்லா.. ஒய்லா… ஒய்லா…..!
உன்னை லவ்வு பண்ணுறேன் டைட்டா !
பெய்லா பெய்லா பெய்லா
லவ்வில் மட்டும் பெய்லா…
ஆகக்கூடாது – அப்புறம் அழக்கூடாது
பழியை லவ் மேல போடக்கூடாது
பெய்லே ஆகக்கூடாது, -மூலையிலே அழக்கூடாது
லவ்வை குறைச்சொல்லி திரியக்கூடாது...!”
தபால்காரன் தெய்வமான காலம் மலையேறி போச்சி
கணினி திரையில் ஸ்டேடஸ்ட் மூலம் காதல் வளரலாச்சி
லவ்வுக்கான வலைதள பூக்கள் ஏராளமா இருக்கு-அதை
கவ்விக்கொண்டு லவ்வுஜோடிகள் இன்பவானில் பறக்கு.!
நத்தையில் முத்து இருப்பது போலே சுத்தமானது காதல்
வத்திக்குச்சி பத்துவது போல எளிதில் பத்தாது காதல்
புரிதல் வேண்டும் முதலில்,-தெளிதல் வேண்டும் மனதில்
இருவர் இணைந்து செயலில்,-இறங்க வேண்டும் முழு மூச்சில்!
ஓரக்கண்ணால் பார்ப்பதெல்லாம் காதலாகாது
ஒழுங்குமுறை இல்லையின்னா காதல் நில்லாது
ஓரவஞ்சனை பார்த்து நின்றால் காதல் வராது
ஒருத்திக்கு ஒருத்தன்தான் நல்ல காதல் நிலைபாடு..!
கூடுவிட்டு கூடுபாயும் ரகம் நானில்லை
பாடுபட்டு கைபிடிப்பேன் ஒரே பெண்ணை
அந்த பெண் நீயாக இருக்க வேண்டும்
என்னை சமநிலையில் வைத்து பார்க்க வேண்டும்.