சென்சஸ் முடிவிலி

மகளே ! நிறுவிச் சொல் பார்க்கலாம்

உனது கணக்கீட்டில்
கை விரல் பத்து
கால் விரல் பத்து
போதாமல் நீளும்
சென்சஸ் முடிவிலியின்
நீட்சியில்
உனது இருப்பின்
இலக்கம் என்ன ?

ECG பதிவுத் தாளில்
எகிறும்
இருதயத் துடிப்பின்
ஒழுங்கற்ற கோடுகளாய்
ஜனத் திரள்
பெருக்கம்

மூச்சு நின்ற
இருதயத்தின்
துடிப்பைக் காட்ட
இயலாது
வீழ்ந்து கிடக்கும்
மானிட்டரின்
நீண்ட கோடாய்
எதிர் கால
மனித நம்பிக்கை

உன்
சந்ததிக்காகவாவது
நிர்மானித்துக் கொள்
ஒரு
முற்று உரையை ...

எழுதியவர் : முகிலன் (23-Feb-16, 9:14 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 55

மேலே