அம்மா

காமங்கள் முடிந்த பின்னே
கருமயிலை பெற்றாயே!
என்னை நீ ஈன்ற பின்னே
காமத்தை வெறுத்தாயே!

தாலிகட்டி வந்ததே எனக்கு
தாயென்று ஆகவா!
தங்கமயில் உனை கொஞ்ச
தயங்கிதான் நிற்கவா???

வாழ்க்கையின் வேர்களுக்கு நீ
அடிமையென்று நினைக்காதே!
வாழ்க்கையின் வேர்களுக்கு நீ
ஆணிவேர் மறவாதே!

வருகின்ற காலங்களில் உனக்கு
துன்பங்கள் வருமே!
வந்தபடி பகிரவே உனக்கு
குழந்தைநான் வரமே!

தெய்வத்திற்க்கு நன்றி சொல்ல
வார்த்தைகள் போதாது!
தாயென்று உனை தந்தான்
வாழ்த்ததான் வயதேது??

பாசங்கள் காட்டுகையில் நீ
பாரத்தை குறைக்கின்றாய்!
பாசங்கு இல்லாமல் நீ
பாரதத்தை வெல்கின்றாய்!

சொத்துகள் உள்ள போது
சொந்தங்கள் வருகிறதே!
சுருங்கி நான் கிடந்தபோதும்
சொத்தாய் நீ வந்தாயே!

ஆணுக்கு கரு இருந்தால்
உன்னை தான் ஈன்றிருப்பேன்!
அன்பாய் மகளென்று சொல்லாமல்
உன்னை தாயென்றே
அழைத்திருப்பேன்!!!

எழுதியவர் : (23-Feb-16, 7:30 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : amma
பார்வை : 212

மேலே