கருத்தினில் நிறையும் கல்வி

படித்தற் குகந்தநற் புத்தகம் வாங்கி
மடிநீக்கி நாளும் மனையில் விடியும்
பொழுதுக்கு முன்பெழுந்து புத்துணர்ச்சிக் கொண்டுனை
உழுதிடும் உழவன்போல் உன்மன வயலினை
எருதென உழுதிடு இறுதியில்
கருத்தினில் நிறையும் கல்வியின் மேன்மையே!
*மெய்யன் நடராஜ்