அடைக்கலம் தாரீர்

கார்த்திகை தீபம்
கதகதக்கும் மாலை அது
பூமியின் இடைவெளியை
இருள் மூடும் வேளை அது
தலையில் குடமேந்தி
வயிற்றில் சுமையேந்தி
ஒற்றையடிப் பாதையினில்
ஒற்றையாக நடந்து வந்தாள்
வாடாத பெண்ணொருத்தி

வீடு வந்து சேர்ந்தவளை
"வா" ன்னு சொல்ல யாருமில்லை
வீட்டை விட்டு போகையிலே
வழியனுப்ப ஆளுமில்லை
அனாதைப் பொண்ணுக்கு
அலங்காரம் எதுக்குன்னு
சொல்லி வெச்ச ஊருக்கு
துயருள்ள வீட்டுக்கு
துணை நிற்கத் தெரியலையே!

பகலெல்லாம் பாடுபட்டு
பணம் சேர்த்து
நீ தான் சொந்தமுன்னு
நிழலோடு உரையாடி
காலம் களிச்ச பேதையவள்

சித்திரை வெயிலில்
ஆளில்லா வயலோரம்
மயங்கி வீழ்ந்த போது
ஆடை கழற்றி அடைந்து விட்டு
மயக்கம் தெளிந்த போது
மாயமானவனை
எங்கு போய்த் தேடுவது

ஊரே ஒத்து வந்து
அடைக்கலம் கொடுத்திருந்தால்
இவள் மானம் காற்றில்
பறந்திருக்க வாய்ப்பில்லை.
***

எழுதியவர் : மொஹம்மத் பர்சான் (26-Feb-16, 11:28 pm)
பார்வை : 94

மேலே