முட்கள்

விறகு சுமந்து வந்த
பெண்ணின் பாதத்தில் முள் குத்தியது.
பிடுங்கி எறிந்து விட்டு
இரத்தம் சொட்ட வீடு வந்தாள்.
எதிரே கணவன்,
வார்த்தை எனும் முட்களால்
குத்தினான் "ஏன் தாமதம்?" என்று.
அப்போது அவளை குத்திய
முள் சொன்னது,
"அம்மா என்னை மன்னித்து விடு.
எனது வருத்தம் எல்லாம்
என்னைவிட கூர்மையான
முட்களும் உன்னை குத்துகிறதே".

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (26-Feb-16, 10:25 pm)
Tanglish : mutkal
பார்வை : 168

மேலே